RERA மனை விற்பனை ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல் சட்டம் 2016

RERA பற்றிய தகவல்கள்: மனை விற்பனை (ஒழுங்குபடுத்துதல் ,மேம்படுத்துதல்) சட்டம் 2016. மனை விற்பனை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டுத்துதல் சட்டம் (The Real Estate (Regulation and Development) Act, 2016 ) எனப்படுவது 2013-ம் ஆண்டு வீட்டு வசதி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாநிலங்கவையில் 14 ஆகஸ்ட், 2013-ம் நாள் இச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இச் சட்டம் நடைமுறைக்கு வந்தது மே 1,2016. அந்தந்த மாநில அரசுகள் இதற்கு உண்டான வரைவு சட்டத்தை ஆறு மாத காலத்திற்குள் வகுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது

RERA பற்றிய தகவல்கள்

1) 1/5 /2017 முன்பு approva lபெறப்பட்ட layout க்கு rera பதிவு தேவையில்லை,

2) Regularisation செய்யப்பட்ட layout ஆக இருக்குமாயின் அதில் ஒர் பகுதி மனைகள் விற்பனை செய்யப்பட்டு மீதம் வீட்டு மனைகள் விற்கப்படாமல் இருக்குமாயின் அந்த layout ல் இருக்கும் விற்பனை செய்யப்படாத மனைகள் அனைத்தையும் Rera வில் பதிவு செய்துகொள்ளலாம் இதற்கு முன்பே விற்பனைக்கு உள்ள மனைகள் எல்லாவற்றிற்கும் அபராத தொகையை செலுத்தி அதையும் rera வில் பதிந்து கொள்ளலாம்.

3) மறு விற்பனை செய்யும் வீட்டடி மனைகள் unapproval ஆக இருந்தால் அதுபோன்ற அனைத்து layout கலும் lpa வால் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் RERA வில் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னரே பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும்.

4) regular approval மற்றும் regularisation approval செய்யப்பட்ட மனைகள் மறுவிற்பனை செய்யும்பொழுது rera வில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருக்கும் வீட்டடி மனைகள் சார்பதிவாளர் அவர்களால் பதிவு செய்ய முடியாது இது மாதிரியான layout இல் விற்பனை செய்தது போக மீதமுள்ள வீட்டடி மனைகள் ஐ RERA வில் பதிவு செய்துகொள்ளலாம் அதன் பின்னரே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

5) regularisation layout ல் lpa approval பெற்றபின் local body அப்ரூவல் பெற்று பகுதி பகுதி மனை இடங்களாக அதற்குரிய கட்டணங்களை கட்டி layout யை விற்பனை செய்து வருபவர்கள் அவ்வப்போது எத்தனை மனை இடங்களுக்கு அப்ரூவல் பெற்று உள்ளனரோ அதை அவ்வப்போது rera வில் பதிவு செய்துகொள்ள வேண்டும் அதன் பின்னரே இந்த பிளாட்டுகள் விற்பனை செய்ய முடியும்.

6) layout development and infrastructure development (as like a gated community) செய்து தனித்தனி வீடுகள் கட்டி விற்பனை செய்பவர்களும் இனிவரும் காலத்தில் RERA வில் பதிவு செய்த பின்னரே வீடுகள் கட்டி விற்பனை செய்ய வேண்டும் அவ்வாறு தனித்தனி வீடுகள் ஆகவும் rera வில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

7) இதில் மேற்சொன்னவாறு அடுக்குமாடி கட்டடங்கள் ஆகவோ தனித்தனி வீடுகள் ஆகவோ கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் பொழுது 1 /5/ 2017 முன்னர் completion certificate பெற்றிருந்தால் rera வில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை இது போன்று இருக்கும் layout வீட்டடி மனைகள் நேரடியாக விற்பனை செய்யலாம்.

8) புதிதாக அப்ரூவல் பெறப்பட்டு தனித்தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் இவை எட்டு கிச்சனுக்கு மேல் இருந்தால் மட்டுமே rera வில் பதிவு செய்ய வேண்டும.

9) அப்ரூவல் செய்யப்பட்டு மறு விற்பனை செய்யும்பட்சத்தில் புரமோட்டர்கள் ஆக இல்லாது வாடிக்கையாளர்களாக இருந்தால் அவர்கள் (innocent buyer ) எனக் கருதி மறு பதிவு செய்வதில் விலக்கு அளிக்க ஆலோசனை செய்து பதில் கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

10) அவ்வாறு வாடிக்கையாளர்கள் மறு பதிவு செய்யும் மனை பிரிவுக்கு வாடிக்கையாளர் பதிலாக எவரொருவர் அந்த layout உரிமையாளரோ அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும்.

11) layout டெவலப் செய்த பின்னர் பார்ம் 5 சியை பின்பற்றி விரைவில் என்ஓசி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

12) 500 sm உள்ள இடமும் அல்லது கட்டிடமும் இருந்தாள் அதற்கு விதிவிலக்கு rera வில் அளிக்கப்பட்டுள்ளது இதில் 8 யூனிட் வரை கட்டிடங்களுக்கும் 500 ஸ்கொயர் மீட்டர் வரை நிலத்திற்கும் இந்த விதி விலக்கு பொருந்தும் மேலும் ஒரு ஸ்கொயர் மீட்டர் நிலத்திலோ எட்டு யூனிட்டுக்கு மேல் வீடுகளோ அப்பார்ட்மெண்ட் இருந்தால் அவை கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் rera வில் இதில் 500 ஸ்கொயர் மீட்டர் இடமாகவும் எட்டு யூனிட்டுக்கு மேல் தனி வீடுகளோ அப்பார்ட்மென்ட் ஆகவோ இருந்தால் அவையும் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் தனித்தனி வீடுகளும் அப்பார்ட்மெண்ட் களும் 8 யூனிட்களுக்கு குறைவாக இருந்து நிலத்தின் அளவு 500 ஸ்கொயர் மீட்டருக்கு கூடுதலாக இருந்தால் இவை போன்றவைகளும் rera வில் பதியப்பட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு https://www.rera.tn.gov.in/pindividiual/login இந்த link கில் rera பற்றிய விபரங்கள் அனைத்தும் கிடைக்கும

RSS
Follow by Email