மனு

*ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய விதிகள் சட்ட பிரிவுகள் அடங்கிய மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்றங்களின் ஆய்வாளர் அவர்களுக்கு மனு செய்ய மாதிரி மனு*

மனுதாரர்:
………………………………..
………………………………..
…………………………………
…………………………………

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
……………………… மாவட்டம்.

மதிப்பு மிகுந்த அய்யா அம்மா,

பொருள்:
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994 இன் 205வது பிரிவு பொடி ஊராட்சி தலைவரை பதவி நீக்கல் உத்தரவு வழங்க கோருதல் தொடர்பாக.

1) மனுதாரர் ஆகிய நான்……………………………மாவட்டம், ……………………….வட்டம், ……………………….
கிராமம், அஞ்சல் குறியீட்டு எண்……………………. கதவு எண்……………………..என்ற முகவரியில் குடியிருந்து வரும்……………………………. என்பவர் மகனாகிய……………………….. வயது……………….. மனுதாரர் ஆகிய நான்……………………………..
என்ற ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர் ஆகிய நான் அகத்தூய்மை யோடும்/ உளப்பூர்வமாகவும்/ இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இல் 51 ஆவது பிரிவின்படி இந்திய திருநாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த (அபிடவிட்டு) சத்தியபிரமாணம் பணிந்து தாக்கல் செய்யப்படுகிறது.

2)மேற்காணும் ……………………………………. ஊராட்சி மன்றத் தலைவர் திரு………………………………. என்பவர் ஊராட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

அல்லது வழங்கப்பட்ட விதி துணைவிதி ஒழுங்குமுறை விதி அல்லது சட்டப்படியான ஆணைகள் எதையும் வேண்டுமென்றே நிறைவேற்ற மறுத்து வருகிறார்.

அல்லது அரசு உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்படுகிறார்.

என்பதால் ஊராட்சி மன்ற மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 இன் படி ஊராட்சி மன்ற தலைவரை நீக்குவதற்கு ஒருமனதான அறிக்கையின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளோம். மேலும் மனுவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு…………………………….. என்பவர் கையொப்பம் இட்டுள்ளார்

3) மாவட்ட ஆட்சியர் / ஊராட்சி மன்றங்களின் ஆய்வாளர் ஆகிய தாங்கள் மேற்காணும் குற்றமுறு செயல்கள் புரிந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் திரு………………………………. என்பவரை பதவி நீக்கம் செய்வதற்கும் /குற்றமுறு செயல்களுக்கான உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் தகுந்த உத்தரவிட வேண்டுமாய் மிகவும் பணிவோடு வேண்டுகிறோம்
தங்கள் உண்மையுள்ள

தேதி:
இடம்:

இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872இன் பிரிவு 70 இன் படி இதையே பிரமாணமாக தேதியன்று………………………………………………………….
என்னால் / எங்களால் கையொப்பம் செய்யப்படுகிறது

சென்னையில் சிறந்த சட்ட நிறுவனம்:மனு. முன்னணி வழக்கறிஞர்கள், சிறந்த மதிப்பிடப்பட்ட வழக்கறிஞர்கள், நம்பர் 1 உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த …